இதய பாதிப்பை குறைக்கும் உணவு முறைப் பற்றி விளக்கம் தருகிறார் வைத்தியர் ராஜேஷ் குமார்.

பலரும் தங்களின் உடல் எடையை குறைக்க பல்வேறு வகையினதான உணவு முறைகளை பின்பற்றி வருகிறார்கள். சிலர் ஃபேலியே டயட்டையும், சிலர் கீடோஜெனிக் டயட்டையும், சிலர் த அல்காலைன் டயட்டையும், சிலர் இண்டர்மிட்டன்ட் டயட்டையும் கடைபிடித்து வருகிறார்கள். 

ஆனால் இவற்றையெல்லாம் விட வைத்தியர்கள் அதிலும் குறிப்பாக இதய சிகிச்சை நிபுணர்கள் ஒவ்வொருவரும், அவர்களின் இதயத்திற்கு எந்த பாதிப்பு வராமல் தடுக்கவேண்டும் என்றால், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் போன்ற மத்திய தரை கடல் நாடுகளில் வசிக்கும் மக்கள் பின்பற்றும் உணவு முறையான மெட்டிட்டேரியனன் உணவு முறையை கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

இத்தகைய உணவு முறைகளில் முந்திரி பருப்பு போன்ற கொட்டைகளும், ஓலீவ் ஓயில் போன்ற எண்ணெய் வகைகளும், குறைவான சர்க்கரை மற்றும் இறைச்சி வகைகளை உட்கொள்ளவேண்டும்.

இதனால் இதயத்திற்கு எந்தவித பாதிப்பும் வருவதில்லை. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இதய பாதிப்பு வரும் என்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் இந்த வகையினதான உணவு முறைக்கு தங்களை மாற்றிக் கொண்டால் அவர்களுக்கான இதய பாதிப்பின் ஆபத்து என்பது இருபது முதல் முப்பது சதவீதம் வரை குறைக்கிறது.

அத்துடன் பக்கவாதம், நினைவுத்திறன் இழப்பு போன்ற பாதிப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் இதனை நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்தகைய உணவு முறையை பின்பற்றவேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.