புதிய அமைச்சரவை இன்னும் சற்றுநேரத்தில் பதவியேற்கவுள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி வருகை தந்துள்ளனர்.

புதிய அமைச்சரவை இன்னும் சற்றுநேரத்தில் பதவியேற்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த அமைச்சரவை பதவியேற்பு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்துள்ளனர்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் சற்றுநேரத்தில் பதவியேற்கவுள்ள நிலையில், பாட்டலி சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, திகாம்பரம் , அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்துள்ளனர்.