வெல்லவாய பொலிஸ் பிரிவுட்பட்ட நுகயாய பிரதேசத்தில் பொருட்கள் விநியோகம் செய்யும் விற்பனை நிலையத்திலிருந்து  சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கு மேலதிகமான நாணயத்தாள்களை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர்களில் வியாபார நிலையத்தில் பணியாற்றிய நபர் ஒருவரும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களால் தொலைக்காட்சி, குளிர்சாதனைப் பெட்டி, கேச் அடுப்பு, உட்பட பல பொருட்களை கொள்ளையடித்ததாகவும் அதன் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர்களின் வீடுகளிலும், ஏனைய நபர்களின் வீடுகளிலிருந்தும் பொலிஸாரின் சுற்றுவளைப்பின் போது கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டநபர்கள் தெலுல்ல, பிபில மற்றும் வெல்லவாய ஆகிய பிரதேசங்களில் உட்பட்டவர்கள் ஆவார்.

குறித்த சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தியதாகவும் அவர்களை எதிர்வரும் ஜனவரி  முதலாம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.