கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயிலுடன் யாழில் லேன்ட்மாஸ்ரர் மோதி விபத்துக்கு ள்ளாகியுள்ளது. 

யாழ்.இந்து மகளீர் கல்லூரிக்கருகில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளையே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

அதன் போது லேன்ட்மாஸ்ரர் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். 

அதேவேளை நேற்றைய தினம்  கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான ஒருவர் தனது வலது கையை இழந்த நிலையில் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

யாழ். அரியாலையைச் சேர்ந்த எஸ்.லோகேஸ்வரன் (வயது 59) எனும் நபர் நேற்றைய தினம் அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் விபத்துக்கு உள்ளானர். 

அதன் போது அவரது வலது கை துண்டாடப்பட்டதுடன் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் அங்கிருந்த மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

துண்டாடப்பட்ட கையினையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அதனை சத்திர சிகிச்சை மூலம் பொருத்த முடியாத நிலை காணப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.