பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய தினம் மதியம் 1.30 மணியளவில் பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது.

தன்னை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்காது சபாநாயகர் மற்றுமொருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமித்துள்ளதாகவும் இதனால் தற்போது இருவர் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருப்பதாகவும் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய சபை அமர்வின்போது விசேட உரையொன்றை ஆற்றினார்.