பாராளுமன்றம் இன்று மதியம் 1.30 மணியளவில் கூடுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலைகளையடுத்து பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து பாராளுமன்றம் நேற்றைய தினம் கூடியது.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டதாக நேற்றைய தினம் சபாநாயகர் பாராளுமன்றில் அறிவித்திருந்தார்.

அதையடுத்து பாராளுமன்றில் குறித்த நியமனம் தொடர்பில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

இந்நிலையிலேயே இன்றைய தினம் பாராளுமன்றம் கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.