எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்­கப்­ப­டாமை உள்­ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி மீதான அடக்­கு­மு­றைகள் கட்­ட­விழ்த்­துவிடப்­ப­டு­வ­தாக தெரி­வித்து அவற்­றுக்கு எதி­ராக முறைப்­பாடு செய்ய கூட்டு எதிர்க்­கட்சி இன்று ஜெனிவா செல்­ல­வுள்­ளது. ஜெனி­வாவில் அமைந்­துள்ள அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தின் செய­லாளர் நாய­கத்­திடம் கூட்டு எதிர்க்­கட்சி முறைப்­பாடு செய்­ய­வுள்­ளது.

கூட்டு எதிர்க் கட்­சி­யினை பிர­தி­நி­தித்­துவம் செய்து மூவ­ர­டங்­கிய குழு நாளை அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தின் செய­லாளர் நாய­கத்தை சந்­தித்து 53 பேரின் கையொப்­பங்­க­ளு­ட­னான முறைப்­பாட்டை கைய­ளிக்க உள்­ளது. ,

இது தொடர்பில் ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற கூட்டு எதர் கட்­சியின் ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய அ பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும குறிப்­பி­டு­கையில்

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீதான அடக்­கு­மு­றை­களை கண்­டித்து ஜெனி­வாவில் அமைந்­துள்ள அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தில் முறைப்­பாடு செய்­வ­தற்­காக கூட்டு எதிர் கட்சி இன்று ஜெனிவா செல்­கின்­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பந்­துல குண­வர்­தன மற்றும் உதய கம்­மன்­பில மற்றும் நான் உட்­பட மூவ­ர­டங்­கிய குழு ஜெனிவா செல்­கின்­றது. 6 விட­யங்­களை மையப்­ப­டுத்­திய நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான முறைப்­பாட்டு பத்­தி­ரத்தில் கூட்டு எதிர் கட்­சியை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் 53 உறுப்­பி­னர்கள் கைச்­சாத்­திட்­டுள்­ளனர். கூட்டு எதிர் கட்­சிக்கு பாரா­ளு­மன்­றத்தில் அதிக ஆச­னங்கள் காணப்­ப­டு­கின்ற நிலை­யிலும் பிர­தான எதிர் கட்சி தலைவர் பதவி வழங்­கப்­பட வில்லை . அதே போன்று பாரா­ளு­மன்­றத்தில் எவ்­வி­த­மான சந்­தர்ப்­பமும் கூட்டு எதிர் கட்­சி­யி­ன­ருக்க வழங்­கப்­பட வில்லை . மாறாக 53 உறுப்­பி­னர்­களில் 23 பேரை இது வரையில் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில் விசா­ர­ணைக்கு அழைத்­துள்­ளனர். இதனை விட பாரிய குற்­றச்­சாட்­டு­களை கொண்ட உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் இருக்­கின்ற நிலையில் அவர்­க­ளுக்கு எதி­ராக எவ்­வி­த­மான நட­வ­டிக்­கையும் இல்லை. மேலும் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் அர­சாங்கம் கூட்டு எதிர் கட்­சி­யி­னரை ஒடுக்­கு­கின்­றது. இவற்றை நாங்கள் எழுத்து மூல­மா­கவும் தெளி­வா­கவும் முறைப்­பாட்டில் பதிவு செய்­துள்ளோம்.

நாட்டு மக்கள் இதில் ஒரு விட­யத்தை தெளி­வாக விளங்­கிக்­கொள்ள வேண்டும். கூட்டு எதிர்க் கட்­சிக்கு ஜெனிவா செல்­கின்­றதே தவிர அங்­கி­ருக்கும் மனித உரி­மைகள் பேர­வைக்கு செல்ல வில்லை. ஜெனி­வாவில் அமைந்­துள்ள அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்­திற்கே செல்­கின்­றது. ஓன்­றி­யத்தின் செய­லாளர் நாய­கத்தை நாளை வியா­ழக்­கி­ழமை சந்­தித்து நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அடக்­கு­மு­றைகள் தொடர்பில் எடுத்­து­ரைப்போம். இன்னும் 48 மணித்­தி­யா­ல­யத்தில் நல்­லாட்சி அர­சாங்கம் ஜன­நா­ய­கத்தை முழு­மை­யாக மயா­னத்­திற்கு அனுப்ப போகின்­றது. உள்­ளு­ராட்சி மன்ற தேர்­தலை எவ்­வி­த­மான கார­ண­மு­மின்றி அர­சாங்கம் ஒத்தி வைக்­கின்­றது. தேர்தல் எப்­போது நடத்­தப்­படும் என்று ஜனா­தி­பதி , பிர­தமர் , சம்­மந்­தப்­பட்ட அமைச்சர் மற்றும் ஆணைக்­கு­ழுவின் தலைவர் இவர்கள் யாருக்கும் தெரி­யாது. இவ்­வா­றான ஜன­நா­யக நாடு உலகில் வேறெங்கும் இல்லை. உள்­ளு­ராட்சி தேர்­தலை ஒரு வரு­டத்­திற்கு ஒத்தி வைக்­கலாம். ஆனால் எப்­போது நடத்­து­வது என்­பது தெரி­யாமல் இருப்­பது வேடிக்­கை­யான விட­ய­மாகும். இதை விட மோச­மான நிலை எது­வென்றால் தேர்­த­லுக்கு திக­தி­யின்றி அனைத்து உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளையும் கலைத்­த­மை­யாகும். இதனால் தேர்தல் சட்டம் , அர­சியல் யாப்பு என அனைத்து விட­யங்­களும் மீறப்­ப­டு­கின்­றது. ஆகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டின் ஜனநாயகத்தை அழிவுப்பாதையில் கொண்டு செல்கின்றது. தற்போதைய அரசாங்கத்தைப் போன்று மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை ஒத்திவைத்திருந்தால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபா இலங்கை மீது பொருளாதார தடை விதித்திருப்பார். தட்டிக் கேட்க யாரும் இல்லாததால் நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்தை மயானத்திற்கு அனுப்பியுள்ளது என்றார்.