படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு

Published By: Vishnu

19 Dec, 2018 | 09:10 AM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் அரச மற்றும் காணிகள் விடுவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்களை முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் இலங்கை பாதுகாப்புப் படைகளின் முல்லைத்தீவு படைத்தளபதி மேஜர் ஜென்ரல் துஸ்யந்த ராஜ குருவினால் கையளிக்கப்பட்டது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரின் பயன்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணிகள்  நேற்று விடுவிககப்பட்டுள்ளன.

இவ்வாறு விடுவிக்கப்படுகின்ற காணிகளுக்கான ஆவணங்களை  மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் நத்தார் தின நிகழ்வும்  நேற்று மாலை 7 மணிக்கு முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.

விசேட ஆராதனைகளுடன் ஆரம்பமான நத்தார் தின நிகழ்ச்சியினை யடுத்து காணிகள் கையளிக்கப்பட்டன விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான ஆவணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் மாவட்ட வனவள அதிகாரி ஆகியோரிடம் இலங்கை பாதுகாப்புப் படைகளின் முல்லைத்தீவு படைத்தளபதி மேஜர் ஜென்ரல் துஸ்யந்த ராஜ குரு கையளித்துள்ளார்

அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை பகுதியில் ஆறு  ஏக்கர் தனியார் காணியும் சிலாவத்தை பகுதியில் ஒரு ஏக்கர் தனியார் காணியும் உப்புமாவெளியில்; 10 .0;5 ஏக்கர் தனியார் காணியும் செம்மலைப்பகுதியில் 10 ஏக்கர் தனியார் காணியும் கோம்பாவில்  பகுதியில் மூன்று  ஏக்கர் காணியும் வள்ளிபுனம் பகுதியில் இரண்டு  ஏக்கர் காணியும் புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதியில் ஒரு ஏக்கர் காணியும் உள்ளடங்கலாக 52. 14ஏக்கர் காணி நேற்று படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40