மகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி

Published By: Vishnu

19 Dec, 2018 | 08:47 AM
image

மகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் சிறுபோகத்தின்போது மகாவலி வலயங்களில் நெற் பயிர்ச்செய்கையுடன் இணைந்ததாக உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கான விரிவான செயற்திட்டமொன்றையும் நடைமுறைப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மகாவலி வலயத்தில் மிளகாய் உள்ளிட்ட உப உணவுப் பயிர்கள் செழிப்பாக பயிரிடப்பட்டு வந்தபோதிலும் தற்போது அவை அழிவடைந்துள்ளதுடன், அதிக செலவில் அவ்வுற்பத்திகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இதனால் தேசிய உணவு உற்பத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்கக்கூடிய வகையில் மகாவலி வலயங்களில் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான புதிய விவசாய செயற்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை மகாவலி அதிகார சபையின் உள்ளக பதவி உயர்வுகளுக்குரிய நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், 

உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பயிர் வகைகளை இயன்றளவு பயிர்ச்செய்வதன் ஊடாக இறக்குமதிகளை மட்டுப்படுத்துவதுடன், அதனால் ஏற்படக்கூடிய அதிக செலவினை விவசாயத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு உபயோகிக்கும் அதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான பின்னணியாகவும் அது அமையும்.

பல வருடங்களாக நிலவிவந்த வரட்சி நிலை நீங்கி கிடைக்கப்பெற்றுள்ள மழைக்காலத்தினை சாதகமாகக்கொண்டு நாடு பூராகவும் விரிவான விவசாய செயற்திட்டங்களை புத்துணர்ச்சியுடனும் உயிர்ப்புடனும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அத்துடன், மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் செயற்திட்டத்தினை துரிதமாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிய விளைநிலங்களைப் பெற்றுக்கொண்ட மகாவலி குடியேற்றவாசிகள் மத்தியில் நிலையான காணி உறுதிகள் ஒரு சிலருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனால் மகாவலி குடியேற்றவாசிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கிய பிரச்சினைக்கு தீர்வாக சகல மகாவலி குடியேற்றவாசிகளுக்கும் நிலையான காணி உறுதிகளை வழங்கும் செயற்திட்டம் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ்.திசாநாயக்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09