(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான தேவை உணரப்பட்டுள்ளது. என்றாலும் இந்த முயற்சி எந்தவொரு அரசியல் தலைவரினதும் தனிப்பட்ட தேவையை நிறைவேற்றும் வகையில் அமையக்ககூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்கள் அபிப்பிராயத்துக்கு செல்லாமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க முடியாது. அதனால் மக்கள் விடுதலை முன்னணி தெரிவிப்பதுபோல் ஒழிக்கவேண்டும் என்றால் அதிகார நிலைப்பாடு தொடர்பில் என்ன நிலைப்பாட்டை வகிக்க முடியும். 

அதனால் எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் இந்த பிரேரணையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெற்றுக்கொள்ள முடியுமா என்பதை பார்க்கவேண்டும் என்றார்.