(இரோஷா வேலு) 

ஹசலக பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நால்வர் இன்றைய தினம் ஹசலக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

 இதன்போது, ஹசலக மற்றும் கிராந்ருகோட்டே பிரதேசங்களைச் சேர்ந்த 28,38,47 வயதுகளையுடைய நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஹசலக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 7 ஆம் கட்டை பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நால்வரே இவ்வாறு புதையல் தோண்ட பயன்படுத்திய உபகரணங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட நால்வரையும் இன்றைய தினம் மஹியங்கணை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன் ஆஜர்படுத்திய ஹசலக பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.