இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 அணிகளின் தலைவர் லசித் மலிங்க 2 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்  போட்டிக்காக வீரர்களின் ஏலம் தற்போது இந்தியாவின் ஜெய்பூரில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் லசித் மலிங்கவை மும்பை இந்தியன்ஸ் அணி இந்தியன் ரூபாவில் 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்நிலையில், லசித் மலிங்க கடந்த வருடம் மும்பை இந்தியன் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.