(நா.தனுஜா)

இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்புடன் அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளமையை வரவேற்கின்றோம் என இலங்கையில் உள்ள சீனத் தூதுரகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் சிக்கல் நிலையைத் தொடர்ந்து சர்வதேசத்தின் கவனம் முழுவதும் இலங்கையின் பக்கம் இருந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றமையை தொடர்ந்து அரசியல் நெருக்கடி நிலை முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட சர்வதேச நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அரசியல் குழப்பநிலைக்கு தீர்வு காணப்பட்டமையை சீனா வரவேற்றுள்ளது.