“அவசியமென்றால் அமைச்சுப் பதவியை நான் ஏற்காதிருக்கிறேன்” என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“கட்சித் தலைவவர்களின் கூட்டத்தின் போது அமைச்சர்களின் எண்ணிக்கையை 30ற்குள் வரையறைக்குள் வைத்துக் கொள்ள தான் தடுமாறுவதாகவும் எவரேனும் சுயமாக முன் வந்து அமைச்சு பதவிகளை பெறாமல் இருக்க முடியுமா என கேட்டார்.

அதற்கு அவசியமானால் நான் அமைச்சு பதவி ஏற்காதிருக்கிறேன் என்றேன். நண்பர் ரிசாத் பதூர்தீனும் அமைச்சு பதவியை ஏற்காதிருக்கிறேன் என்றார்” என குறிப்பிட்டள்ளார்.