(எம்.மனோசித்ரா)

அரசியல்வாதிகள் தொடர்ந்தும் எமது நாட்டில் ஏற்பட்டுத்தி வருகின்ற நெருக்கடி நிலைமை மற்றும் அதன் காரணமாக  “தேசிய மக்கள் இயக்கம்” என்ற அமைப்பாக செயற்பட தீர்மானித்துள்ளதாக  காமினி நந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் தொடர்ந்தும் எமது நாட்டில் ஏற்பட்டுத்தி வருகின்ற நெருக்கடி நிலைமை மற்றும் அதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஜனநாயகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மீளக்கட்டியெழுப்புவதற்காக பல்வேறு தொழிற்சங்கள் ஒன்றிணைந்து ' தேசிய மக்கள் இயக்கம்" என்ற அமைப்பாக செயற்பட தீர்மானித்துள்ளதாக அதன் ஊடக செயளாலர் காமினி நந்த குணவர்தன தெரிவித்தார். 

எதிர்கால சந்ததியினருக்கு சிறந்தொரு நாட்டை உருவாக்கிக் கொடுப்பதற்கான ஆரம்பம் இது வாகும் என தெரிவித்த அவர், இந்த அமைப்பின் மூலம் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் விஷேடமாக புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான வலியுறுத்தல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும். 

எனினும் இதனை நாம் சேவையாகவே செய்கின்றோமேயன்றி அரசியல் இலாபம் தேடுவது எமது நோக்கமல்ல எனவும் தெரிவித்தார். 

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.