வட - கிழக்கில் 263.55 ஏக்கர் காணி இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் - இராணுவம் 

Published By: Vishnu

18 Dec, 2018 | 04:25 PM
image

(ஆர்.விதுஷா)

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 263.55 ஏக்கர்  அரச மற்றும் தனியார் காணிகளை தேசிய பாதுகாப்பிற்கு  அச்சுறுத்தல்  இல்லாத வகையில்  விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு  முன்னர் குறித்த காணிகளை  விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்மந்தப்பட்ட தரப்பிற்கு அறிவுறுத்தியுள்ளார். அதற்கமைய அரச மற்றும் தனியாருக்கு சொந்தமான சுமார் 263.55 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

2009 ஆம்  ஆண்டு மே மாதத்திலிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரிடமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. 

அதற்கமைய 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் சுமார் 84523.84 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் இராணுவத்தினர் வசம் காணப்பட்டன. அதன் பின்னர்  2018  நவம்பர் 25 ஆம் திகதி ஆகும் போது இராணுவத்தினர் வசம் காணப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் அளவும் 66754.59 ஏக்கர்களாக பதிவாகியுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09