புதிய அமைச்சரவை 30 உறுப்பினர்களுக்கு மட்டுப்பட வேண்டும் என்பதுடன் அவர்களின் அமைச்சு பொறுப்புக்களுடன் கல்வி தகமைகளையும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள பெப்பரல் அமைப்பு , அமைச்சரவை தெரிவில் பின்பற்ற வேண்டிய 6 விடயங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளது. 

இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 அமைச்சரவை உறுப்பினர்களின் கல்வி தகமைகளை கவனத்தில் கொள்ளுதல் மற்றும் அதனடிப்படையில் அமைச்சு பதவிகளை வழங்குதல் . அவற்றை குறித்த அமைச்சரின் கல்வி தகைமைகளுடன் நாட்டிற்கு அறிவித்தல் போன்ற விடயங்களை கட்டாயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களிடையே காணப்படும் வெறுப்பு தன்மையை இல்லாதொழித்து புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் பெப்ரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.