மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று காலை காணமல் போனோர் அலுவலக பிரதிநிதி மிராக் ரஹீம் பார்வையிட்டார்.

சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில்  மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று 118 ஆவது நாளாக  தொடர்கிறது.

தற்போது அகழ்வு பணிகள் மற்றும் அப்புறப்படுத்தல் பணிகள் இடம் பெற்று வருவதோடு,  புதைகுழியினை சற்று அகழப்படுத்தி அகழ்வு  பணிகளும் இடம் பெற்று வருகின்றது.

 இது வரை மன்னார் மனித புதை குழியில் இருந்து 276 மேல்  முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவற்றில் 269 க்கு மேல் மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு நீதி மன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியினை நேரடியாக பார்வையிடுவதற்காகவும் தகவல்களை பெறுவதற்காகவும் காணமல் போனோர் அலுவலக பிரதிநிதி மிராக் ரஹீம் நேரடி வியஜம் ஒன்றை மேற்கொண்டு அகழ்வு பணி இடம் பெறும் இடத்திற்கு வருகை தந்தார்.

-வருகை தந்த குறித்த பிரதி நிதி மன்னார் மனித புதை குழி அகழ்வு பணி தொடர்பாகவும் ஏனைய விடையங்கள் குறித்தும் அகழ்வு பணிக்கு பொறுப்பாக சட்டவைத்திய அதிகாரியிடம் கேட்டு அறிந்துகொண்டார்.

 இதுவரை மீட்கப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மனித எலும்புக்கூடுகள்  பரிசோதனைக்காக அனுப்பப்பட தகுதியான மனித எலும்பு கூடுகள் தெரிவு செய்யும் பணியும் இடம் பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.