பாராளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவாரென அறிவித்ததுடன்  எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீரவும் செயற்படுவாரென அறிவித்திருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான விவாதம் தற்போது பாராளுமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது லக்ஷ்மன் செனவிரத்ன, இந்திக பண்டார நாயக்க, லக்ஷ்மன் செனவிரட்ன, பியசேன கமகே ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டனர்.