பாராளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவாரென அறிவித்ததுடன்  எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீரவும் செயற்படுவாரென அறிவித்திருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான விவாதம் தற்போது பாராளுமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய லக்ஸ்மன் கிரியெல்ல,  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து சுதந்திரக் கட்சி நீங்கியதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்க கூடாதென  பாராளுமன்றில் தெரிவித்தார்.

இதையடுத்து சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டி வந்தால் அல்லது வகித்தால்  அவர்கள் எவ்வாறு எதிர்க்கட்சி பொறுப்புக்களை வகிக்க என்று முடியும் எனத் தெரிவித்ததுடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்படக் கூடாதென்றும் அவர் வலியுறுத்தினார்.