(நா.தனுஜா)

இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிக்கு ஜனநாயக முறையில் தீர்வு காணப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அத்தோடு தேசிய ஒருமைப்பாடு தொடர்பில் இலங்கை முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்கத் தயாராக உள்ளோம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.நாட்டில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து வந்த அரசியல் நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள் தமது அக்கறையினை தொடர்;நதும் வெளிப்படுத்தி வந்தன. இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவை தொடர்ந்து, மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதுடன் அரசியல் சிக்கல்நிலை முடிவிற்கு வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.