(நா.தினூஷா)

பிரதமரின் பதவி ஏற்பின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையின் மூலம் ஜனநாயகத்திற்கான போராட்டம் இன்னும் நிறையவடையவில்லை என்றே கருத வேண்டும் என  ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.

இதேவேளை, 30 பேருக்கு வரையறுக்கப்பட்ட அமைச்சரவையில் மக்களின் எதிர்பார்ப்பின் படி மக்கள் ஆட்சியை நடத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது எனவும் குறிப்பிட்டார். 

அலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல இதனைத் தெரிவித்தார். .

அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

தான் செய்த தவறுகளை எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததன் காரணமாகவே ஜனாதிபதி அவ்வாறானதொரு உரையினை ஆற்றியிருந்தார். 

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றத்தில் 123 பேர் ஆதவவுடன் எமது பெரும்பான்மையை நாம் நிரூபித்துள்ளதோடு, நீதிமன்ற தீர்ப்பின் மூலமும் எமது தரப்பு நியாயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவருடைய கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்ளப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.