(ஆர்.விதுஷா)

வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் கம்பஹவில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு 8.10 மணியளவில்  கம்பஹா பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கு அமையவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இதன் போது வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகளுடன்   43 வயதுடைய கெலும் கிரஷாந்த என்பவர் கைது செய்யப்பட்டார். சந்தே நபர் உடுகம்பொல பகுதியை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர். அவரிடமிருந்து  வெளிநாட்டு தயாரிப்ப துப்பாக்கி உட்பட 04 துப்பாக்கி ரவைகளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளுக்கமைய  வெளிநாட்டு தயாரிப்பு  துப்பாக்கியை மேற்படி நபரிற்கு விநியோகித்தமை தொடர்பில் உடுகம்பொல பகுதியில் வைத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன் போது  30 வயதுடைய பிங்கிரய பகுதியை சேர்ந்த பிரியந்த பண்டார மற்றும் 30 வயதுடைய பிங்கிரிய பகுதியை சேர்ந்த அசங்க இரோசன் பெனாண்டோ எனப்படுபவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் 

அத்துடன், சந்தேக நபர்களை பொலிசார் கம்பஹா நீதவான் நீதி மன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தியதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.