தேசிய அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தில் 11 அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், விலை குறைப்பை மேற்கொள்ளாத வர்த்தகர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட கடந்த 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் குறித்த விலை குறைப்பு அமுல்படுத்தப்பட்ட போதும், அதன் பயன் நுகர்வோரை சென்றடையவில்லையென பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் இன்று   முதல் சுற்றிவளைப்பை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பொருட்களின் விலைகளை குறைக்காத வர்த்தகர்கள் குறித்து, 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.