சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இந்நிலையில் நாளைய அமர்வின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் பாராளுமன்றில் ஆளுந்தரப்புக்கு அருகில் ஆசனங்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் நாளைய தினம் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் சபாநாயகர் கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.