பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களின் நியமனங்களானது இன்று இடம்பெற மாட்டாது எனவும் நாளை அல்லது நாளை மறுதினம் இடம்பெறலாம் எனவும் நம்பகத் தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சரவை நியமனங்களானது இன்று இடம்பெறும் என நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் அமைச்சரவை குறித்து இன்னும் முழுமையான முடிவு எடுக்கப்படத காரணமாகவே இன்று அமைச்சர்களக்கான நியமனங்கள் வழங்கும் சாத்தியம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில முக்கிய அமைச்சுக்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு தீர்மானம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.