நாகதீபத்தில் புத்தர் சிலை நிறுவும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை!

யாழ்ப்பாணம் நாகதீபத்திலுள்ள விஹாரையில் புதிய புத்தர் சிலை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

குறித்த சிலையை நிறுவுவதை நிறுத்துமாறு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளதாக வௌியான செய்திகளில் உண்மையில்லை என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாகதீபத்தில் அமைக்கப்படவுள்ள புதிய சிலைக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் காரணமாக அதனை நிறுத்துமாறு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வௌியாகியது.

எனினும் அவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடவில்லை எனவும், கடற் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியின் கீழ் அதனை அமைக்குமாறு, அரசாங்கம் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் ரெஜினோல்ட் குரே சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.