நாளை திங்கட்கிழமை புதிய அமைச்சரவையை நியமிக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதையடுத்து அலரிமாளிகையில் இன்று ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வுகளில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, அடுத்த 48 மணித்தியாலங்களில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

எனினும் நாளைய தினமே புதிய அமைச்சரவை நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

அதற்கமைய புதிய அமைச்சரவையில் 30 உறுப்பினர்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற யோசைனையும் ஐக்கிய தேசியக் கட்சியினரால் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளது. 

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைச் சுப்பதவிகளை பகிர்ந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.