புதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா

Published By: Vishnu

16 Dec, 2018 | 04:41 PM
image

இந்தியாவின் அயல் நாடும் நட்பு நாடுமான இலங்கை அரசியில் இடம்பெற்ற மாற்றங்களை வரவேற்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

நாட்டில் கடந்த 52 நாட்களாக இடம்பெற்று வந்த அரசியல் குழப்ப நிலைகளைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியனம் பெற்றதன் பின்னர் இந்தியா வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள ரவீஷ் குமார், 

இந்தியாவின் நெருங்கிய அண்டை மற்றும் உண்மையான நண்பனாக, இலங்கையில் அரசியல் நிலைமை பற்றிய தீர்மானத்தை இந்தியா வரவேற்கிறது. இது அனைத்து அரசியல் சக்திகளாலும் நிரூபிக்கப்பட்ட முதிர்ச்சியின் பிரதிபலிப்பு, இலங்கை ஜனநாயகம் மற்றும் அதன் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீள் எழுச்சியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

அத்துடன் இலங்கையில் மக்கள் நலன் சார் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கத் தயார் நிலையில் உள்ளதாகவும், மேலும் இந்த மாற்றத்தின் இந்தியா-இலங்கை உறவுகள் ஒரு முன்னோக்கிய பாதையில் செல்ல தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02