சீனாவில் இடம்பெற்ற உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். 

உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களை மட்டும் பிடித்திருக்கும் வீர, வீராங்கனைகளுக்கான உலக பேட்மிண்டன் இறுதித் தொடர் கடந்த 12 ஆம் திகதி சீனாவின் குவாங்சோவ்வில் ஆரம்பமானது.

இந் நிலையில் இன்று இடம்பெற்ற இத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டு 21-19, 21-17 என நேர்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

முன்னதாக, அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை 21-16, 25-23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் சிந்து. 

இதற்கு முன்னர் ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் பி.வி.சிந்து. உலக பேட்மிண்டன் இறுதித் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.