நேபாள நாட்டில்  மலைப் பாதை ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியானதோடு. பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில்  துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன் கியான்பேடி பகுதியில் உள்ள மலை பாதையில் பாதை தடுமாறி, சுமார் 13,000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதில் சம்பவ இடத்திலேயே 20 பேர் பலியானதோடு 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில்.  இதுவரை 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வேன் அதீத வேகத்தில் பயணித்தே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேபாளத்தில் மலைப் பாதையில் உள்ள மோசமான சாலைகளின் காரணமாக அங்கு விபத்து கடந்த சில வருடங்களில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.