புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிஙக மீண்டும் பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியினர் அந்த மகழ்ச்சியை கொண்டாடும் முகமாக அலரிமாளிகையில் விசேட சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி இச் சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிறப்பு உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

தற்போது அலரிமாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியினரும் அவர்களது ஆதரவாளர்களும் பிரதமரின் வருகைக்காக காத்துக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.