இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை(16.12.2018)  மீண்டும் புதிய பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதி, மைத்திரிபால சிறிசேன முன்­னி­லையில் பதவிப் பிர­மாணம் செய்­து­கொள்­ள­வுள்ளார். அந்த வகையில்,  இன்று காலை 11.16 மணியளவில், ஜனாதிபதி செயலகத்தில் மேற்படி பதவி பிரமாணம்  இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஐ. தே. க.வின் ஆதரவாளர்களும், ஐ. தே. க.வின் உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி விரைந்துள்ளதாக ஐ.தே.க பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம், இன்று காலை 10.30 மணியளவிலேயே குறித்த பதவியேற்ப்பு இடம்பெறும் என தெரியப்படுத்தியிருந்தமையும் குறிப்படதக்கது.