தெஹிவளை பகுதியில் 32 கிலோகிரேம் 329 கிரேம் ஹெரோயினுடன் ஒருவர் க‍ைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 23 வயதையுடைய பங்களாதேஷ் பிரஜை எனவும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 388 மில்லியன் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இது சம்பந்தமான விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.