நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விரத சிகிச்சை

Published By: R. Kalaichelvan

15 Dec, 2018 | 08:07 PM
image

இன்றைய திகதியில் உலகம் முழுவதும் முப்பதிற்கும் மேற்பட்ட மில்லியன் மக்கள் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஏராளமான சிகிச்சை முறைகள் புதிதாக அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றன. 

இதில் புதிதாக விரத சிகிச்சை என்ற சிகிச்சை முறை அறிமுகமாகியிருக்கிறது. இது குறித்து ஐரோப்பிய இதழ் ஒன்றில் வெளியான மருத்துவ செய்தியை எம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சர்க்கரை நோய் நிபுணரான டொக்டர் நல்லபெருமாள்.“சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலும் டைப் =2 சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது விரதம் இருக்கும் சிகிச்சை முறை அறிமுகமாகியிருக்கிறது.

 வாரத்திற்கு மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் அதாவது ஒருநாள் விட்டு ஒரு நாள் இருபத்திநான்கு மணி நேரம் விரதம் இருப்பது. இத்தகைய விரத காலங்களில் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்த மருந்து மற்றும் மாத்திரைகளை சாப்பிடுவதுடன் உணவு முறையில் குறைந்த கலோரி கொண்ட உணவுகளையும், குறைந்த கலோரி உடைய திரவங்களையும் ஊட்டச்சத்து நிபுணர்களின் கண்காணிப்பு மற்றும் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளவேண்டும். 

இரண்டு வாரங்கள் கழித்து அவர்களுடைய சர்க்கரையின் அளவை பரிசோதிப்பார்கள். அப்போது சர்க்கரையின் அளவு குறைந்திருந்தாலோ அல்லது கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலோ இந்த சிகிச்சையை மேலும் சில காலம் தொடர மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துவார்கள். 

இத்தகைய சிகிச்சையை தற்போது ஆய்வு செய்த போது நேர்மறையான பலன்கள் கிடைத்திருப்பதால் விரைவில் இது மருத்துவ ஆணையத்தின் முறைப்படியான அனுமதியைப் பெற்று பொதுமக்களிடத்தில் அறிமுகப்படுத்தப்படும்.” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த சிகிச்சை முறை எம்மைப் போன்ற தெற்காசிய நாட்டவர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான கலாச்சார மற்றும் பண்பாட்டு நடைமுறை என்பதால் இத்தகைய சிகிச்சை அறிமுகமானவுடன் பிரபலமாகும் என்று அவதானிக்கப்படுகிறது. அத்துடன் சர்க்கரைநோயின் கட்டுப்பாட்டிற்காக பேரியாரிட்ரிக் சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களும் இத்தகைய விரத சிகிச்சையை  பின்பற்ற முடியும் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29