மஹியங்கனை வியானா நீரோடையில் மிதந்து வந்த பெண்ணொருவரது சடலத்தை மஹியங்கனைப் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

35 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க இப் பெண்ணின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்கென்று மஹியங்கனை அரசினர் மருத்துவமனை பிரதேச அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் அடையாளம் காணப்படாததால் பொது மக்களின் உதவியை பொலிசார் கோருவதாக மஹியங்கனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சந்தனவிஜயசேக்கர தெரிவித்தார்.