ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேனவின் ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களினால் ஆளுநருக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று  காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபினி கேதீஸ்வரன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மோகன்தாஸ் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ரீதியாக வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராம சக்தி வேலைத்திட்டங்கள் பயிற்சி வகுப்புக்கள் என்பன தொடர்பிலும் கிடைக்கப்பெற்ற நிதி செலவழிக்கப்படும் விதம் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஆளுநருக்கு விளக்கமளித்தனர்.