ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள இல்லத்தில் இடம்பெற்ற சர்வமத அனுஸ்டானங்களை தொடர்ந்து தனது இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார்.