ஆண்களோ பெண்களோ அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், அவர்களின் இடுப்பளவு அதிகரிக்கத் தொடங்கினால் ஆபத்து என எச்சரிக்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.

பொதுவாக எம்மில் பலரும் தற்போது விரும்பிய உணவு வகைகளை எப்போது வேண்டுமானாலும் உட்கொள்கிறார்கள். இதனால் அவர்களின் அடிவயிற்று, இடுப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கொழுப்பு தேக்கமடைகிறது. இதனால் அவர்களின் செயற்பாட்டில் முதலில் மந்த நிலை ஏற்படுகிறது.

பிறகு வேகமாக இயங்க நினைத்தாலும் வேகமாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ இயங்க முடிவதில்லை. இதன் காரணமாக அவர்களின் இதயத்திற்கு செல்லவேண்டிய இரத்தவோட்டத்தில் தடையோ அல்லது இடையூறோ ஏற்படத் தொடங்குகிறது. இதன் காரணமாகவே அவர்களுக்கு இதயம் சார்ந்த பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

அதனால் இடுப்பளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதையும் மீறி இடுப்பு மற்றும் அடிவயிற்று பகுதிகளில் கொழுப்புகள் தேங்கிவிட்டால்,அது இதயத்திற்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை உருவாக்கலாம் என்பதை உணர்ந்து அதனை கரைப்பதற்கான சிகிச்சைகளையோ அல்லது வைத்திய நடைமுறைகளையோ உறுதியாக பின்பற்றி இதயத்தை பாதுகாத்திடுங்கள் என வைத்தியர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.