தர்மதுரை என்ற படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், இயக்குநர் சீனு ராமசாமியும் இணைந்திருக்கிறார்கள்.

மாமனிதன் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரிக்கிறார். மார்கழி மாதம் காரணமாக இந்த படத்தின் படபிடிப்பும், தொடக்கவிழாவும் நேற்று நடைபெற்றது.

இதில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடிக்க அவரின் பரிந்துரையின் பேரில் நடிகை காயத்ரி தெரிவாகியிருக்கிறார். நடிகைகாயத்ரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் ஏழாவது படமிது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சீனு ராமசாமி. இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

‘தர்மதுரை ’யைப் போல் இந்த மாமனிதன் படமும் கிராமிய பின்னணியில் உறவுகளை மையப்படுத்திய திரைக்கதை என்கிறார்கள் படக்குழுவினர்.