செவிப்புலனற்றோருக்கான இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணியினர் இன்று (14-12-2018) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டி அண்மையில் இந்தியாவில் புதுடில்லி நகரில் இடம்பெற்றது. 

இலங்கை விளையாட்டு வீரர்களின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி, போட்டியாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதியினால் கிரிக்கட் குழுவினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செவிப்புலனற்றோருக்கான கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அனுலா ரஞ்சனி, பயிற்சியாளர்களான ஜயலத் அபோன்சு, சுஷாந்த குணரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.