ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்களான ஹர்ச டி சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அவரது அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.