ஆசிய பளுதூக்கும் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய குழுவினர் இன்று (14-12-2018) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

போட்டித் தொடரில் ஆறு தங்கப் பதக்கங்கள், 16 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களை வென்ற இலங்கை அணியினரின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி, போட்டியாளர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தேசிய பயிற்சியாளர் மோதிலால் ஜயதிலக்க, கொழும்பு பளுதூக்கும் சங்கத்தின் பணிப்பாளர் சுபாஷினி வீரசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.