இலங்கை அணியின் 17 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து பிரதமரோ அல்லது அமைச்சர்களோ இல்லாத நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்க வேண்டிய நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் நாளை நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெறவுள்ளது. 

  அங்கு விளையாடவுள்ள இருபதுக்கு - 20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கான வீரர்களின் குழாம் இன்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு வகையான போட்டிகளுக்கும் தலைவராக லசித் மாலிங்கவும் உப தலைவராக நிரோசன் டிக்வெல்லவும் பெயரிடப்பட்ட 17 பேரடங்கிய வீரர்கள் பட்டியலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதற்தடவையா அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாமில் லசித் மலிங்க ( தலைவர்), நிரோசன் டிக்வெல்ல (உபதலைவர்), அஞ்சலோ மெத்தியூஸ், தனுஷ்க குணதிலக, குசல் ஜனித் பெரேரா, டினேஸ் சந்திமல், அசேலே குணரத்ன, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, திஸர பெரேரா, தசுன் சாணக்க, லக்சன் சந்தகன், சீக்குகே பிரசன்ன, துஷ்மந்த சாமிர, கசுன் ராஜித, நுவான் பிரதீப், லகிரு குமார ஆகியோரின் பெயர்கள் இடம்ப்பட்டுள்ளன.