கொழும்பை அண்டியுள்ள சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை (15.12.2018) நள்ளிரவு  முதல் நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பை அண்டிய சில பகுதிகளில் நாளை நள்ளிரவு  முதல் 18 மணித்தியாலங்கள் வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

நாளை நள்ளிரவு 12 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிவரைக்கும் அமுலில் இருக்கும் எனவும், வீதி திருத்த பணிகாரணமாக குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மொரகஸ்முல்ல, இராஜகிரிய, அதுல்கோட்டே, ஒபேசேகபுரம், பண்டார நாயக்கபுரம், நாவல, கொஸ்வத்தை, உள்ளிட்ட இராஜகிரியவிலிருந்து நாவல பல்கலைக்கழகம் வரைக்கும் பிரதான வீதியின் திருத்தப்பணிக்காக குறித்த நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.