இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை குவித்துள்ளது.

அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந் நிலையில் இவ் விரு அணிகளுக்குமிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பேர்த்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி அவுஸ்திரேலிய அணி இன்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவின்போது தனது முதல் இன்னிங்ஸுக்காக 90 ஓவர்களை எதிர்கொண்டு 6 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை குவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக மார்கஸ் ஹாரிஸ் 70 ஓட்டங்களையும், ஆரோன் பின்ஞ் 50 ஓட்டங்களையும், ஷொன் மார்ஷ் 45 ஓட்டங்களையும், டிராவிஸ் ஹெட் 58 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். 

ஆடுகளத்தில் டிம் பெயின் 16 ஓட்டத்துடனும், பேட் கம்மின்ஸ் 11 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் இஷான் சர்மா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.