(எம்.மனோசித்ரா)

நாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து அரசியல் பிரச்சினையை அமைதியான முறையிலும், அறிவு பூர்வமாகவும் அணுகுவதன் மூலம் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என  பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அனைத்து அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொள்வதோடு, மேலும் இந்த பிரச்சினையை தொடராமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணானது என தெரிவித்து நேற்று  உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாகவும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.