பிக்பொஸ் புகழ் நடிகர் மஹத்தும், நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் இணைந்து நடிக்கும் படத்தின் படபிடிப்பு இன்று ஆரம்பமானது.

இதனை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

சென்னையில் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் செம்மொழிப் பூங்காவில் அறிமுக இயக்குநர் பிரபு ராம் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் மஹத், நாயகி ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டவர்கள் பங்குபற்றினர்.

இவர்களுடன் நடன இயக்குநர் சாண்டி, நகைச்சுவை நடிகர் நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் வருகைத் தந்து படக்குழுவினரை வாழ்த்தினர்.

இதனையடுத்து படத்தின் முதல் நாள் படபிடிப்பை இயக்குநர் வெங்கட்பிரபு கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பிரபு ராம் பேசுகையில்,‘ திரில்லர் ஜேனரில் எக்சன் கலந்த காதல் கதையாக இந்த படம் தயாராகிறது. படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும்.” என்றார்.