பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க தனக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் முகமாக உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தாக்கல்செய்த விசேட மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இடைக்கால தடையுத்தரவு தொடர்பான மேன்முறையீட்டை மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த இடைக்கால தடையுத்தரவு மீதான வழக்கை விசாரணை செய்ய 5 நீதியரசர்கள் அடங்கிய பூரண நீதியரசர் ஆயத்தை கோரி ஐக்கிய தேசிய முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.