உணவு ஒவ்வாமை காரணமாக கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 16 ஊழியர்கள்,நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காலை உணவை உட்கொண்ட பின்னர் குறித்த 16 பேரும் சுகயீனமுற்றதாகவும் அதன் பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு  இவர்களின் ஐந்து பேரின் உடல்நிலை மிகவும் மோசமாகியதால் அவர்கள் சீதுவை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.